Praises and Promises

51. நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ள தேவனே, ஸ்தோத்திரம்.
52. பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையால் நிறைந்திருப்பதற்காக, ஸ்தோத்திரம்.
53. எங்கள் தேவனாகிய கர்த்தரே, ஸ்தோத்திரம்.
54. தகப்பன் தன் பிள்ளையைச் சுமப்பது போல, எங்களைச் சுமக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
55. என் கரத்தின் செயல்களையெல்லாம் ஆசீர்வதிக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
56. எங்களை இளைப்பாறப்பண்ணின தேவனே, ஸ்தோத்திரம்.
57. எங்களுக்காக யுத்தம் பண்ணும் தேவனே, ஸ்தோத்திரம்.
58. யோசுவாவை திடப்படுத்திப் பலப்படுத்தின தேவனே, ஸ்தோத்திரம்.
59. இரக்கமுள்ள தேவனே, ஸ்தோத்திரம்.
60. உம்முடைய மகிமையையும், மகத்துவத்தையும் காண்பித்த தேவனே, ஸ்தோத்திரம்.
61. நீர் ஒருவரே கர்த்தர், ஸ்தோத்திரம்.
62. கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் அன்புகூருவேன், ஸ்தோத்திரம்.
63. உடன்படிக்கையையும், தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவனே, ஸ்தோத்திரம்.
64. கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதிக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
65. சகல நோய்களையும் என்னை விட்டு விலக்குகிற தேவனே, ஸ்தோத்திரம்.
66. வனாந்தரத்திலே நடத்திவந்த தேவனே, ஸ்தோத்திரம்.
67. கர்த்தவே, நீர் எனக்குக் கொடுத்த நல்ல தேசத்துக்காக, ஸ்தோத்திரம்.
68. கன்மலையிலிருந்து தண்ணீரை புறப்படப்பண்ணின தேவனே, ஸ்தோத்திரம்.
69. சம்பாதிப்பதற்கான பெலனை கொடுக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
70. பட்சிக்கிற அக்கினியைப்போல, எனக்கு முன்பாகக் கடந்துபோகிற தேவனே, ஸ்தோத்திரம்.
71. வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் உம்முடையதே, ஸ்தோத்திரம்.
72. தேவாதி தேவனே, கர்த்தாதி கர்த்தரே, ஸ்தோத்திரம்.
73. மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனே, ஸ்தோத்திரம்.
74. திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் நியாயஞ்செய்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
75. ஆபிரகாமை வானத்தின் நட்சத்திரங்களைப்போல பெருகப்பண்ணின தேவனே, ஸ்தோத்திரம்.