top of page

376. கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும், ஸ்தோத்திரம்.

377. என் காலங்கள் உமது கரத்தில் உள்ளதே, ஸ்தோத்திரம்.

378. கர்த்தவே, உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணும், ஸ்தோத்திரம்.

379. உம்மை நம்புகிறவர்களுக்கு  நன்மை செய்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

380. உமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணுகிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

381. இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

382. எனக்குப் போதித்து, நான் நடக்கவேண்டிய வழியை காட்டுகிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

383. என்மேல் கண்ணை வைத்து, எனக்கு ஆலோசனை சொல்லுகிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

384. உம்மை நம்பியிருக்கிறவனை கிருபை சூழ்ந்து கொள்ளும், ஸ்தோத்திரம்.

385. சுரமண்டலத்தினால் உம்மை துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன், ஸ்தோத்திரம்.

386. உம்முடைய வார்த்தை உத்தமமும், உம் செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது, ஸ்தோத்திரம்.

387. பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக, ஸ்தோத்திரம்.

388. கர்த்தவே, நீர் சொல்ல ஆகும், நீர் கட்டளையிட நிற்கும், ஸ்தோத்திரம்.

389. உம்மை சுதந்தரமாகத் தெரிந்து கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது, ஸ்தோத்திரம்.

390. உமக்குப் பயந்தவர்களை உயிரோடே காக்க, அவர்கள்மேல்  நோக்கமாயிருக்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

391. கர்த்தாவே, உம்மை எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; உமது துதி எப்போதும் என் வாயிலிருக்கும், ஸ்தோத்திரம்.

392. எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கி விட்ட கர்த்தரே, ஸ்தோத்திரம்.

393. இந்த ஏழையின் கூப்பிடுதலைக்  கேட்டு, எல்லா இடுக்கண்களையும் நீங்கலாக்கி இரட்சித்த தேவனே, ஸ்தோத்திரம்.

394. கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், ஸ்தோத்திரம்.

395. கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது, ஸ்தோத்திரம்.

396. நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு சமீபமாயிருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

397. நீதிமானுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

398. மகா சபையிலே உம்மைத் துதிப்பேன், திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன், ஸ்தோத்திரம்.

399. என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும், ஸ்தோத்திரம்.

400. கர்த்தாவே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது, ஸ்தோத்திரம்.

bottom of page