top of page

851. உம்முடைய வாக்குத்தத்தங்கள் ஆம் என்றும், ஆமென் என்றும் இருப்பதற்காக, ஸ்தோத்திரம்.

852. என்னை கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி அபிஷேகம்பண்ணின தேவனே,  ஸ்தோத்திரம்.

853. கிறிஸ்துவுக்குள் என்னை வெற்றிசிறக்கப்பண்ணுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

854. ஆவியான கர்த்தரே, ஸ்தோத்திரம்.

855. கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுண்டு, ஸ்தோத்திரம்.

856. எனக்கு விசுவாசத்தின் ஆவியை கொடுத்த தேவனே, ஸ்தோத்திரம்.

857. கிறிஸ்துவின் அன்புக்காக, ஸ்தோத்திரம்.

858. இயேசுகிறிஸ்துவைக்கொண்டு என்னை உம்மோடு ஒப்புரவாக்கின தேவனே, ஸ்தோத்திரம்.

859. எங்களுக்காக இயேசுவை பாவமாக்கின உம்முடைய நீதிக்காக ஸ்தோத்திரம்.

860. அநுக்கிரக காலத்தில் எனக்குச் செவிகொடுத்து உதவிசெய்த தேவனே, ஸ்தோத்திரம்.

861. எங்களை ஏற்றுக்கொண்டு, எங்கள் பிதாவாயிருப்பவரே, ஸ்தோத்திரம்.

862. சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

863. உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் பிரியமாயிருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

864. சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

865. தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக, ஸ்தோத்திரம்.

866. பெலவீனத்திலே உம் பெலன் பூரணமாய் விளங்குவதற்காக, ஸ்தோத்திரம்.

867. உம்முடைய கிருபையும், அன்பும், ஐக்கியமும் எங்களோடு இருப்பதற்காக, ஸ்தோத்திரம்.

868. என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னை அழைத்த உம்முடைய கிருபைக்காக, ஸ்தோத்திரம்.

869. எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனே, ஸ்தோத்திரம்.

870. சாபத்திற்கு என்னை நீங்கலாக்கி மீட்டுக்கொண்ட இயேசுகிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

871. இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருப்பதற்காக, ஸ்தோத்திரம்.

872. கிறிஸ்து இயேசுவுக்குள் நாமெல்லாம் ஒன்றாக இருப்பதற்காக ஸ்தோத்திரம்.

873. குமாரனுடைய ஆவியை எங்கள் இருதயங்களில் ஊற்றின தேவனே, ஸ்தோத்திரம்.

874. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை நம் ஆவியுடனே இருப்பதற்காக, ஸ்தோத்திரம்.

875. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்.

bottom of page