top of page

501. சேனைகளின் கர்த்தரே, நீர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர். ஸ்தோத்திரம்.

502. அதிசயமானவரே, ஆலோசனைக்கர்த்தரே, ஸ்தோத்திரம்.

503. வல்லமையுள்ள தேவனே, ஸ்தோத்திரம்.

504. நித்திய பிதாவே, சமாதானப்பிரபுவே, ஸ்தோத்திரம்.

505. ஞானத்தையும் உணர்வையும் அருளுபவரே, ஸ்தோத்திரம்.

506. ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியுடையவரே, ஸ்தோத்திரம்.

507. உமக்கு  பயப்படுகிற பயத்தை அருளும் ஆவியானவரே, ஸ்தோத்திரம்.

508. நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரிக்கிறவரே, ஸ்தோத்திரம்.

509. என் பெலனும், என் கீதமுமானவரே, ஸ்தோத்திரம்.

510. நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன், ஸ்தோத்திரம்.

511. ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனுமானவரே, ஸ்தோத்திரம்.

512. கண்ணீரைத் துடைக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

513. ஆலோசனையில் ஆச்சரியமும், செயலில் மகத்துவமானவரே, ஸ்தோத்திரம்.

514. எங்களுக்கு இரங்கும்படி காத்திருக்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

515. மகத்துவமான கர்த்தரே, ஸ்தோத்திரம்.

516. கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம், ஸ்தோத்திரம்.

517. என்னை குணப்படுத்தி பிழைக்கப் பண்ணின தேவனே, ஸ்தோத்திரம்.

518. என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீரே, ஸ்தோத்திரம்.

519. சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

520. சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

521. உமக்கு காத்திருக்கிறவர்கள் கழுகுகளைப்போல எழும்புவார்கள், ஸ்தோத்திரம்.

522. முந்தினவராயிருக்கிற கர்த்தரே, பிந்தினவர்களோடும் இருப்பவரே, ஸ்தோத்திரம்.

523. என்னைத் தெரிந்துகொண்டு, என்னை வெறுத்துவிடாத தேவனே, ஸ்தோத்திரம்.

524. நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன் என வாக்களித்த தேவனே, ஸ்தோத்திரம்.

525. என்னைப் பலப்படுத்தி, சகாயம்பண்ணுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

bottom of page