Praises and Promises

76. எங்களை ஆசீர்வதிக்கின்ற தேவனே, ஸ்தோத்திரம்.
77. என்னை மீட்டுக்கொண்ட தேவனே, ஸ்தோத்திரம்.
78. நான் வேண்டிக்கொண்டதின்படியெல்லாம் செய்த தேவனே, ஸ்தோத்திரம்.
79. என்னோடே இருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
80. எங்களோடுக் கூட வருகிற தேவனாகிய கர்த்தரே, ஸ்தோத்திரம்.
81. பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் என்னை மேன்மையாக வைப்பேன் என வாக்களித்த தேவனே, ஸ்தோத்திரம்.
82. வருகையிலும் போகையிலும் ஆசீர்வதிப்பேன் என வாக்களித்த தேவனே, ஸ்தோத்திரம்.
83. என்னை உம்முடைய பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவேன் என வாக்களித்த தேவனே, ஸ்தோத்திரம்.
84. எல்லாவற்றிலும் எனக்கு பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவேன் என வாக்களித்த தேவனே, ஸ்தோத்திரம்.
85. என்னைக் கீழாக்காமல் மேலாக்குவேன் என வாக்களித்த தேவனே, ஸ்தோத்திரம்.
86. எனக்கு முன்பாகக் கடந்துபோகிற தேவனே, ஸ்தோத்திரம்.
87. எனக்கு முன்பாகப் போகிறவரும், என்னோடே இருப்பவருமாகிய தேவனே, ஸ்தோத்திரம்.
88. மேகஸ்தம்பத்தில் தரிசனமான தேவனே, ஸ்தோத்திரம்.
89. கர்த்தாவே, உம்முடைய நாமம் பிரசித்தப்படுவதற்காக, ஸ்தோத்திரம்.
90. சத்தியமுள்ள தேவனே, ஸ்தோத்திரம்.
91. என்னை உமது கண்மணியைப் போலக் காத்த தேவனே, ஸ்தோத்திரம்.
92. அநாதி தேவனே, ஸ்தோத்திரம்.
93. அடைக்கலமானவரே, ஸ்தோத்திரம்.
94. என் சத்துருக்களை அழித்துப்போடுபவரே, ஸ்தோத்திரம்.
95. சகாயஞ்செய்யும் கேடகமும், மகிமை பொருந்திய பட்டயமும் நீரே, ஸ்தோத்திரம்.
96. உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவரே, ஸ்தோத்திரம்.
97. எங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
98. சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரே, ஸ்தோத்திரம்.
99. சேனையின் அதிபதியான கர்த்தரே, ஸ்தோத்திரம்.
100. பரிசுத்தமுள்ள தேவனே, ஸ்தோத்திரம்.