top of page

576. சிறியவனை பலத்த ஜாதியாக ஏற்றகாலத்திலே நடப்பிக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

577. என்மேல் இருக்கிற தேவனுடைய ஆவியானவரே, ஸ்தோத்திரம்.

578. சுவிசேஷத்தை அறிவிக்கக் என்னை அபிஷேகம்பண்ணின தேவனே, ஸ்தோத்திரம்.

579. வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் தருகிற தேவனே, ஸ்தோத்திரம்.

580. இட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை தரித்த தேவனே, ஸ்தோத்திரம்.

581. உம்முடைய கையில் அலங்காரமான கிரீடமாய் இருப்பேன் என வாக்களித்த தேவனே, ஸ்தோத்திரம்.

582. என்னை எப்சிபா என்று அழைத்த தேவனே, ஸ்தோத்திரம்.

583. மகத்தான வல்லமையிலே எழுந்தருளின தேவனே, ஸ்தோத்திரம்.

584. என்னை இரட்சிக்க வல்லவராகிய தேவனே, ஸ்தோத்திரம்.

585. கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்காகவும், ஸ்தோத்திரம்.

586. கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர், ஸ்தோத்திரம்.

587. களிமண்ணான என்னை உருவாக்குகிற தேவனே, ஸ்தோத்திரம்.

588. உம்முடைய வசனத்துக்கு நடுங்குகிறவனை நோக்கிப்பார்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

589. என் தாய் தேற்றுவதுபோல என்னைத் தேற்றுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

590. என் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே என்னை அறிந்த தேவனே, ஸ்தோத்திரம்.

591. என்னைக் காக்கும்படிக்கு என்னுடனே கூட இருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

592. கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர், ஸ்தோத்திரம்.

593. நீரே மெய்யான தெய்வம், ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா, ஸ்தோத்திரம்.

594. உம்முடைய வார்த்தைகள் என் இருதயத்துக்கு மகிழ்ச்சியாயிருகிறது, ஸ்தோத்திரம்.

595. நெருக்கப்படுகிற நாளில், என் அடைக்கலமாகிய கர்த்தரே, ஸ்தோத்திரம்.

596. ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தாவே, ஸ்தோத்திரம்.

597. கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன். ஸ்தோத்திரம்.

598. என்னை இரட்சிப்பதற்காக என்னோடே இருக்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

599. அநாதிசிநேகத்தால் என்னைச் சிநேகித்த தேவனே, ஸ்தோத்திரம்.

600. காருணியத்தால் என்னை இழுத்துக் கொண்ட தேவனே, ஸ்தோத்திரம்.

bottom of page