top of page

651. தாவீதின் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

652. எங்கள் பாவங்களை நீக்கி எங்களை இரட்சிப்பவரே, ஸ்தோத்திரம்.

653. இம்மானுவேல் - எங்களோடு இருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

654. நசரேயனே, உமக்கே ஸ்தோத்திரம்.

655. பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பவரே, ஸ்தோத்திரம்.

656. தேவ ஆவியானவரே, ஸ்தோத்திரம்.

657. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது, ஸ்தோத்திரம்.

658. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள், ஸ்தோத்திரம்.

659. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கிவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள், ஸ்தோத்திரம்.

660. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள், ஸ்தோத்திரம்.

661. இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள், ஸ்தோத்திரம்.

662. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள், ஸ்தோத்திரம்.

663. சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள், ஸ்தோத்திரம்.

664. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது, ஸ்தோத்திரம்.

665. பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக, ஸ்தோத்திரம்.

666. பூரண சற்குணராயிருக்கிற  எங்கள் பிதாவே, ஸ்தோத்திரம்.

667. பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, ஸ்தோத்திரம்.

668. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று இரட்சித்துக்கொள்ளும், ஸ்தோத்திரம்.

669. ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஸ்தோத்திரம்.

670. என்னத்தை உண்போம் என்று ஜீவனுக்காக கவலைப்படாதிருங்கள் என்ற இயேசுவே, ஸ்தோத்திரம்.

671. என்னத்தை உடுப்போம் என்று சரீரத்துக்காக கவலைப்படாதிருங்கள் என்ற இயேசுவே, ஸ்தோத்திரம்.

672. நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்  என்ற இயேசுவே, ஸ்தோத்திரம்.

673. உன் விசுவாசித்தபடியே ஆகக்கடவது என்றுரைத்த இயேசுவே, ஸ்தோத்திரம்.

674. காற்றையும் கடலையும் அதட்டின இயேசுவே, ஸ்தோத்திரம்.

675. உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றுரைத்த இயேசுவே, ஸ்தோத்திரம்.

bottom of page