top of page

301. நீதியின்மேல் பிரியப்படுகிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

302. எளியவர்களைக் காத்து சுகமாயிருக்கப்பண்ணுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

303. கர்த்தாவே, நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும், ஸ்தோத்திரம்.

304. உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன், ஸ்தோத்திரம்.

305. நீர் எனக்கு நன்மைசெய்தபடியால் உம்மை பாடுவேன், ஸ்தோத்திரம்.

306. நீர் என்னுடைய சிறையிருப்பைத் திருப்பும்போது, எனக்கு களிப்பும், மகிழ்ச்சியும் உண்டாகும், ஸ்தோத்திரம்.

307. கர்த்தவே,  நீர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர், ஸ்தோத்திரம்.

308. எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரே, ஸ்தோத்திரம்.

309. ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துகிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

310. உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், நித்திய பேரின்பமும் உள்ளதற்காய் ஸ்தோத்திரம்.

311. என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை ஸ்திரப்படுத்தும், ஸ்தோத்திரம்.

312. உம்மை நம்புகிறவர்களை உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே, ஸ்தோத்திரம்.

313. கண்மணியைப்போல என்னைக் காத்தருளும், ஸ்தோத்திரம்.

314. உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும், ஸ்தோத்திரம்.

315. என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன், ஸ்தோத்திரம்.

316. என் கன்மலையும், கோட்டையும், இரட்சகருமாகிய கர்த்தரே, ஸ்தோத்திரம்.

317. நான் நம்பியிருக்கிற துருகமும், கேடகமும், இரட்சணியக் கொம்பும், உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறவரே, ஸ்தோத்திரம்.

318. துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரே, உமக்கே ஸ்தோத்திரம்.

319. நெருக்கத்திலே உம்மை நோக்கிக் கூப்பிடுவன், ஸ்தோத்திரம்.

320. ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிடுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

321. தயவுள்ளவனுக்கு தயவுள்ளவராக இருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

322. உத்தமனுக்கு உத்தமராக இருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

323. என் இருளை வெளிச்சமாக்குகிற தேவனே, ஸ்தோத்திரம்.

324. உம்மை நம்புகிற அனைவருக்கும் கேடகமாயிருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

325. என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிற தேவனே, ஸ்தோத்திரம்.

bottom of page