top of page

626. உமக்காக என்னை நியமித்துக்கொண்டவரே, ஸ்தோத்திரம்.

627. எங்களைக் குணமாக்கி, காயங்களைக் கட்டுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

628. தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும், ஸ்தோத்திரம்.

629. பெரிய காரியங்களைச் செய்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

630. தமது ஜனத்துக்கு அடைக்கலமும், அரணான கோட்டையுமாயிருப்பரே, ஸ்தோத்திரம்.

631. பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிற தேவனாகிய கர்த்தரே, ஸ்தோத்திரம்.

632. என் நெருக்கத்தில் உம்மை நோக்கிக் கூப்பிட்டேன். எனக்கு உத்தரவு அருளின கர்த்தரே, ஸ்தோத்திரம்.

633. பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், என் சத்தத்தைக் கேட்டீரே, ஸ்தோத்திரம்.

634. என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீரே, ஸ்தோத்திரம்.

635. தடைகளை நீக்கிப்போடுகிறவர் எங்களுக்கு முன்பாக நடந்துபோகிறீர், ஸ்தோத்திரம்.

636. என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார், ஸ்தோத்திரம்.

637. நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ள கர்த்தரே, ஸ்தோத்திரம்.

638. கர்த்தாவே நீர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை, ஸ்தோத்திரம்.

639. என் கட்டுகளை அறுப்பேன் என வாக்களித்த தேவனே, ஸ்தோத்திரம்.

640. என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன், ஸ்தோத்திரம்.

641. என்னை உயரமான ஸ்தலங்களில் நடக்கப்பண்ணுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

642. என் ஆக்கினைகளை அகற்றி, என் சத்துருக்களை விலக்கின தேவனே, ஸ்தோத்திரம்.

643. என் நடுவில் இருக்கிற என் தேவனாகிய கர்த்தரே, ஸ்தோத்திரம்.

644. சகல ஜனங்களுக்குள் என்னை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்ற தேவனே, ஸ்தோத்திரம்.

645. என்னைத் தெரிந்துகொண்ட சேனைகளின் கர்த்தரே, ஸ்தோத்திரம்.

646. வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தின கர்த்தரே, ஸ்தோத்திரம்.

647. மாறாத கர்த்தரே, ஸ்தோத்திரம்.

648. எங்கள்மேல் ஆசீர்வாதத்தை பொழிகிற தேவனே, ஸ்தோத்திரம்.

649. உம்முடைய நாமத்துக்குப் பயந்திருக்கிறவர்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும், ஸ்தோத்திரம்.

650. உம்முடைய செட்டையின்கீழ் ஆரோக்கியம் இருக்கும், ஸ்தோத்திரம்.

bottom of page