Praises and Promises

426. என் ஆத்துமாவை மரணத்துக்கு தப்புவிக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
427. என் கால்களை இடறலுக்கு தப்புவிக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
428. விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன், ஸ்தோத்திரம்.
429. எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனே, ஸ்தோத்திரம்.
430. என் தஞ்சமும், உயர்ந்த அடைக்கலமுமான தேவனே, ஸ்தோத்திரம்.
431. எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள தேவனே, ஸ்தோத்திரம்.
432. உமது கிருபையை என்னைவிட்டு விலக்காத தேவனே, ஸ்தோத்திரம்.
433. உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணுகிற தேவனே, ஸ்தோத்திரம்.
434. திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனாய் இருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
435. விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
436. கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிற தேவனே, ஸ்தோத்திரம்.
437. எங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிற தேவனே, ஸ்தோத்திரம்.
438. நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடுகிறவரே, ஸ்தோத்திரம்.
439. எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
440. என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாதிருக்கிறவரே, ஸ்தோத்திரம்.
441. பரிசுத்தரே, சுரமண்டலத்தைக் கொண்டு உம்மைப் பாடுவேன், ஸ்தோத்திரம்.
442. மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ளவரே, ஸ்தோத்திரம்.
443. கர்த்தாவே, உமக்கே என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக, ஆமென்.
444. என் அடைக்கலமும், என் கோட்டையுமான தேவனே, ஸ்தோத்திரம்.
445. என் வழிகளிலெல்லாம் என்னைக் காக்கும்படி தூதர்களுக்குக் கட்டளையிடுபவரே, ஸ்தோத்திரம்.
446. ஆபத்தில் என்னோடிருந்து, என்னைத் தப்புவித்து கனப்படுத்துபவரே, ஸ்தோத்திரம்.
447. என் கால் சறுக்குகிறப்போது, உமது கிருபை என்னைத் தாங்குவதற்காக ஸ்தோத்திரம்.
448. நான் நம்பியிருக்கிற என் கன்மலையான தேவனே, ஸ்தோத்திரம்.
449. துதித்தலுடனே, சங்கீதங்களால் உம்மை ஆர்ப்பரித்துப் பாடுவேன், ஸ்தோத்திரம்.
450. கர்த்தாவே நீர் பெரியவர், உமக்கு ஸ்தோத்திரம்.