Praises and Promises

901. உம்மைப்பற்றும் அன்புக்கும் பொறுமைக்கும் நேராய் நடத்துவீராக. ஸ்தோத்திரம்.
902. என்னுடைய நம்பிக்கையாயிருக்கிற இயேசுகிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.
903. என்னைப் பலப்படுத்துகிற இயேசுகிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.
904. பாவிகளை இரட்சிக்க உலகத்திற்கு வந்த கிறிஸ்து இயேசுவே, ஸ்தோத்திரம்.
905. உமக்கே கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக, ஸ்தோத்திரம்.
906. எல்லோரையும் மீட்கத் தம்மை ஒப்புக்கொடுத்த கிறிஸ்து இயேசுவே, ஸ்தோத்திரம்.
907. இரட்சகராகிய ஜீவனுள்ள தேவனே, உம்மையே நம்பியிருக்கிறோம், ஸ்தோத்திரம்.
908. கர்த்தாதி கர்த்தாவே, ஸ்தோத்திரம்.
909. உமக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக, ஸ்தோத்திரம்.
910. பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை கொடுத்திருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
911. எல்லாக் காரியங்களிலும் எனக்குப் புத்தியைத் தந்தருளுகிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.
912. உம்முடையவர்களை அறிந்திருக்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.
913. தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிற வேதவாக்கியங்களுக்காக, ஸ்தோத்திரம்.
914. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தரே, ஸ்தோத்திரம்.
915. எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சிக்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.
916. பரிசுத்த ஆவியை என்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளின கர்த்தரே, ஸ்தோத்திரம்.
917. உம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜூவாலைகளாக மாற்றுகிற தேவனே, ஸ்தோத்திரம்.
918. நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
919. மகிமையினாலும் கனத்தினாலும் என்னை முடிசூட்டுபவரே, ஸ்தோத்திரம்.
920. உம்முடைய வார்த்தை ஜீவனும் வல்லமையுமாய் இருப்பதற்காக, ஸ்தோத்திரம்.
921. உம்முடைய வார்த்தை ஆத்துமாவையும் ஆவியையும் பிரிக்கத்தக்கதாய் இருப்பதற்காக, ஸ்தோத்திரம்.
922. உம்முடைய வார்த்தை இருதயத்தின் யோசனைகளை வகையறுக்கிறதாய் இருப்பதற்காக, ஸ்தோத்திரம்.
923. மகா பிரதான ஆசாரியரான இயேசுவே, ஸ்தோத்திரம்.
924. மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியரான இயேசுவே, ஸ்தோத்திரம்.
925. வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற பிரதான ஆசாரியரே, ஸ்தோத்திரம்.