top of page

251. வல்லமையிலும் நியாயத்திலும் பெரியவரே, ஸ்தோத்திரம்.

252. மகா நீதிபரரே, ஸ்தோத்திரம்.

253. மறைவான இடத்தில் ஞானத்தை வைத்தரே, ஸ்தோத்திரம்.

254. தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது, ஸ்தோத்திரம்.

255.  நான் காண்கிற தேவனே, உமக்கே ஸ்தோத்திரம்.

256. உம்முடைய வேதத்தில் பிரியமாயிருக்கிர மனுஷன் பாக்கியவான். ஸ்தோத்திரம்.

257. நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

258. உம்மை பயத்துடனே சேவிப்பேன், ஸ்தோத்திரம்.

259. உம்மை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள். ஸ்தோத்திரம்.

260. நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர், ஸ்தோத்திரம்.

261. பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்த தேவனே, ஸ்தோத்திரம்.

262. என்னைத் தாங்குகிற தேவனே, ஸ்தோத்திரம்.

263. கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே என்னை இரட்சியும், ஸ்தோத்திரம்.

264. இரட்சிப்பு கர்த்தருடையது, உமக்கே ஸ்தோத்திரம்.

265. நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும் தேவனே, ஸ்தோத்திரம்.

266. நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர், ஸ்தோத்திரம்.

267. கர்த்தாவே, எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும். ஸ்தோத்திரம்.

268. பக்தியுள்ளவனைக் தமக்காகத் தெரிந்து கொண்ட கர்த்தரே, ஸ்தோத்திரம்.

269. கர்த்தவே, நீதியின் பலிகளைச் செலுத்தி உம்மேல் நம்பிக்கையாய் இருப்பேன், ஸ்தோத்திரம்.

270. கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும், ஸ்தோத்திரம்.

271.  கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர், ஸ்தோத்திரம்.

272. என் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, என் தியானத்தைக் கவனியும், ஸ்தோத்திரம்.

273. என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும், ஸ்தோத்திரம் .

274. கர்த்தாவே, காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி காத்திருப்பேன், ஸ்தோத்திரம்.

275. என் வழியைச் செவ்வைப்படுத்துகிற தேவனே, ஸ்தோத்திரம்.

bottom of page