Praises and Promises

351. என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுகிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.
352. கர்த்தவே, இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும், ஸ்தோத்திரம்.
353. உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன், ஸ்தோத்திரம்.
354. கர்த்தாவே, என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும், ஸ்தோத்திரம்.
355. கர்த்தாவே, சபைகளிலே உம்மைத் துதிப்பேன், ஸ்தோத்திரம்.
356. கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர். ஸ்தோத்திரம்.
357. என் ஜீவனின் பெலனான கர்த்தரே, ஸ்தோத்திரம்.
358. தீங்குநாளில் என்னை உம்முடைய கூடாரத்தில் மறைத்து, கன்மலையின்மேல் உயர்த்துகிற தேவனே ஸ்தோத்திரம்.
359. என்னைச் சுற்றிலும் இருக்கிற சத்துருக்களுக்கு மேலாக என் தலையை உயர்த்துகிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.
360. கர்த்தாவே உம்மை பாடி, கீர்த்தனம்பண்ணுவேன். ஸ்தோத்திரம்.
361. என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் கைவிடாமலும் இரும், ஸ்தோத்திரம்.
362. தகப்பனும் தாயும் கைவிட்டாலும், என்னைச் சேர்த்துக் கொள்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.
363. என் இருதயத்தை ஸ்திரப்படுத்துகிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.
364. என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்ட கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
365. என் பெலனும், என் கேடகமுமாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
366. அபிஷேகம் பண்ணினவனுக்கு அரணும் அடைக்கலமுமானவரே, ஸ்தோத்திரம்.
367. கர்த்தவே, உமது ஜனத்தை இரட்சித்து ஆசீர்வதியும், ஸ்தோத்திரம்.
368. கர்த்தவே, பரிசுத்த அலங்காரத்துடனே உம்மை தொழுது கொள்வேன், ஸ்தோத்திரம்.
369. உமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பவரே, ஸ்தோத்திரம்.
370. உமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி ஆசீர்வதிப்பவரே, ஸ்தோத்திரம்.
371. என்னை குணமாக்கின கர்த்தரே, ஸ்தோத்திரம்.
372. நான் குழியில் இறங்காதபடி உயிரோடே காத்த கர்த்தரே, ஸ்தோத்திரம்.
373. உம்முடைய தயவோ நீடிய வாழ்வு, உமக்கே ஸ்தோத்திரம்.
374. என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணின கர்த்தரே, ஸ்தோத்திரம்.
375. கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன், ஸ்தோத்திரம்.