top of page

476. எல்லாத் தீங்குக்கும், என்னை விலக்கிக் காக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

477. பெரிய காரியங்களைச் செய்த கர்த்தரே, ஸ்தோத்திரம்.

478. உமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

479. கர்ப்பத்தின் கனி உம்மால் கிடைக்கும் பலன், ஸ்தோத்திரம்.

480. ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரே, ஸ்தோத்திரம்.

481. சத்துருக்களின் கையிலிருந்து விடுதலைபண்ணினவரே, ஸ்தோத்திரம்.

482. உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன், ஸ்தோத்திரம்.

483. தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள், ஸ்தோத்திரம்.

484. நித்திய வழியிலே என்னை நடத்துகிற தேவனே, ஸ்தோத்திரம்.

485. என் விண்ணப்பம் உமக்கு முன்பாக இருக்கக்கடவது, ஸ்தோத்திரம்.

486. கர்த்தாவே, என் கண்கள் உம்மை நோக்கியிருக்கிறது, ஸ்தோத்திரம்.

487. உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவதற்காக, ஸ்தோத்திரம்.

488. கர்த்தாவே, உம்மை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது, ஸ்தோத்திரம்.

489. உண்மையாய், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாயிருக்கிறவரே, ஸ்தோத்திரம்.

490. சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிற தேவனே, ஸ்தோத்திரம்.

491. உமக்குப் பயந்து, உமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் பிரியமாயிருக்கிறவரே, ஸ்தோத்திரம்.

492. சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக, ஸ்தோத்திரம்.

493. ஞானத்தைத் தருகிற தேவனே, ஸ்தோத்திரம்.

494. உம்முடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும், ஸ்தோத்திரம்.

495. இருதயங்களைச் சோதிக்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

496. புத்தியுள்ள மனைவியோ நீர் அருளும் ஈவு, ஸ்தோத்திரம்.

497. உம்மை நம்புகிறவனே, உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான், ஸ்தோத்திரம்.

498. உமக்கு பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள், ஸ்தோத்திரம்.

499. ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

500. தேவனே நீர் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும், ஸ்தோத்திரம்.

bottom of page