Praises and Promises

526. நீதியின் வலதுகரத்தினால் என்னைத் தாங்குபவரே, ஸ்தோத்திரம்.
527. என்னைப் பேர்சொல்லி அழைத்தவரே, ஸ்தோத்திரம்.
528. இஸ்ரவேலின் பரிசுத்தரும், என் இரட்சகருமாயிருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
529. சமுத்திரத்திலே வழியை உண்டாக்குகிற தேவனே, ஸ்தோத்திரம்.
530. வனாந்தரத்திலே வழியை உண்டாக்குகிற தேவனே, ஸ்தோத்திரம்.
531. என் பாவங்களை நினையாமல் இருப்பவரே, ஸ்தோத்திரம்.
532. என் சந்ததியின்மேல் உம்முடைய ஆவியை ஊற்றுவேன் என வாக்களித்த தேவனே, ஸ்தோத்திரம்.
533. என் மீறுதல்களை மேகத்தைப்போல அகற்றிவிட்டவரே, ஸ்தோத்திரம்.
534. என் தாயின் கர்ப்பத்தில் என்னை உருவாக்கின கர்த்தரே, ஸ்தோத்திரம்.
535. எனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குகிற தேவனே, ஸ்தோத்திரம்.
536. என்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே, ஸ்தோத்திரம்.
537. அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களை கொடுப்பேன் என வாக்களித்த தேவனே, ஸ்தோத்திரம்.
538. உபத்திரவத்திலே என்னைத் தெரிந்துகொண்ட தேவனே, ஸ்தோத்திரம்.
539. நான் நடக்கவேண்டிய வழியிலே என்னை நடத்துகிற தேவனே, ஸ்தோத்திரம்.
540. அநுக்கிரக காலத்திலே எனக்கு செவிகொடுக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
541. என்னை மறப்பதில்லை என வாக்களித்த தேவனே, ஸ்தோத்திரம்.
542. உம்முடைய உள்ளங்கைகளில் என்னை வரைந்திருக்கிறவரே, ஸ்தோத்திரம்.
543. கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை, ஸ்தோத்திரம்.
544. காலைதோறும் என்னை எழுப்புகிற தேவனே, ஸ்தோத்திரம்.
545. உம் கரத்தின் நிழலினால் என்னை மறைக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
546. என்னுடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு துக்கங்களைச் சுமந்தவரே, ஸ்தோத்திரம்.
547. கர்த்தாவே, உம்முடைய தழும்புகளால் குணமாகிறோம், ஸ்தோத்திரம்.
548. உருக்கமான இரக்கங்களால் சேர்த்துக்கொள்பவரே, ஸ்தோத்திரம்.
549. நித்திய கிருபையுடன் எனக்கு இரங்குகிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.
550. என்மேல் மனதுருகுகிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.