top of page

701. உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும், ஸ்தோத்திரம்.

702. பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்ற இயேசு கிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

703. ஐயாயிரம்பேருக்கு அற்புதமாய் உணவளித்த இயேசுவே, ஸ்தோத்திரம்.

704. ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும், ஸ்தோத்திரம்.

705. கர்த்தாவே, என் முழு இருதயத்தோடு உம்மில் அன்புகூருவேன், ஸ்தோத்திரம்.

706. பிறனிடத்தில் அன்புகூரும்படி அழைத்த இயேசுவே, ஸ்தோத்திரம்.

707. அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்துகிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

708. உன்னதமானவருடைய குமாரனாகிய இயேசுவே, ஸ்தோத்திரம்.

709. என்  தாழ்மையை நோக்கிப்பார்த்த கர்த்தரே, ஸ்தோத்திரம்.

710. உம்முடைய இரக்கம் உமக்குப் பயந்திருக்கிறவர்கள் மேல் இருபதற்காக, ஸ்தோத்திரம்.

711. தாழ்மையானவர்களை உயர்த்துகிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

712. பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்புகிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

713. கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகரே, ஸ்தோத்திரம்.

714. தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக, ஸ்தோத்திரம்.

715. உமது அடியேனை சமாதானத்தோடே போகவிடுகிற ஆண்டவரே, ஸ்தோத்திரம்.

716. ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்த இயேசுவே, ஸ்தோத்திரம்.

717. தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி அபிஷேகம்பண்ணபட்ட இயேசுவே, ஸ்தோத்திரம்.

718. இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்க வந்த இயேசுவே, ஸ்தோத்திரம்.

719. சிறைப்பட்டவர்களை விடுதலையாக்க வந்த இயேசுவே, ஸ்தோத்திரம்.

720. உம்முடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளுக்காக, ஸ்தோத்திரம்.

721. பூமியிலே பாவங்களை மன்னிக்க அதிகாரம் உடைய இயேசுவே, ஸ்தோத்திரம்.

722. மகா தீர்க்கதரிசியான இயேசுவே, ஸ்தோத்திரம்.

723. பிசாசின் கட்டுகளை முறித்துப்போடுகிற இயேசுவே, ஸ்தோத்திரம்.

724. தேவனுடைய நேசகுமாரனாகிய இயேசுவே, ஸ்தோத்திரம்.

725. மனுஷருடைய ஜீவனை இரட்சிக்க வந்த இயேசுவே, ஸ்தோத்திரம்.

bottom of page