Praises and Promises

676. பாவிகளை மனந்திரும்ப அழைக்கவந்த இயேசுவே, ஸ்தோத்திரம்.
677. உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றுரைத்த இயேசுவே, ஸ்தோத்திரம்.
678. சகல வியாதிகளையும், நோய்களையும் நீக்கி சொஸ்தமாக்கின இயேசுவே, ஸ்தோத்திரம்.
679. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களுக்கு இளைப்பாறுதல் தரும் தேவனே, ஸ்தோத்திரம்.
680. சாந்தமும் மனத்தாழ்மையுடையவரே, உமக்கே ஸ்தோத்திரம்.
681. தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும், ஸ்தோத்திரம்.
682. உன் விசுவாசதின்படியே, உனக்கு ஆகக்கடவது என்றுரைத்த இயேசுவே, ஸ்தோத்திரம்.
683. ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.
684. என் சிலுவையை எடுத்துக்கொண்டு உம்மை பின்பற்றிவர அழைத்தவரே, ஸ்தோத்திரம்.
685. பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தூதர்களோடு வருவீரே, ஸ்தோத்திரம்.
686. உம் நாமத்தினாலே கூடியிருக்கிறவர்கள் நடுவிலே இருப்பவரே, ஸ்தோத்திரம்.
687. உம்மாலே எல்லாம் கூடும், ஸ்தோத்திரம்.
688. மனதுருக்கமுள்ள இயேசுவே, எங்களுக்கு இரங்கும், ஸ்தோத்திரம்.
689. தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, ஸ்தோத்திரம்.
690. கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்.
691. ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிற இயேசுவே, ஸ்தோத்திரம்.
692. முடிவுபரியந்தம் நிலைநிற்பவனை இரட்சிக்கும் இயேசுவே, ஸ்தோத்திரம்.
693. வானமும் பூமியும் ஒழிந்துபோம், உம்முடைய வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. ஸ்தோத்திரம்.
694. பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்பட்ட உம்முடைய இரத்தத்திற்காக, ஸ்தோத்திரம்.
695. விழித்திருந்து ஜெபம்பண்ண பெலன் தாரும் தேவனே, ஸ்தோத்திரம்.
696. சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பவரே, ஸ்தோத்திரம்.
697. உலகத்தின் முடிவுபரியந்தம் எங்களுடனேகூட இருக்கிறவரே, ஸ்தோத்திரம்.
698. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.
699. உம்முடைய ராஜ்யம் சமீபமாயிருக்கிறதற்காக, ஸ்தோத்திரம்.
700. இயேசுவே, நீர் தேவனுடைய பரிசுத்தர், ஸ்தோத்திரம்.