top of page

726. உம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியை கொடுப்பவரே, ஸ்தோத்திரம்.

727. நாங்கள் பேசவேண்டியவைகளைப் போதிக்கிற பரிசுத்த ஆவியானவரே, ஸ்தோத்திரம்.

728. எங்களுக்கு வேண்டியவைகளை அறிந்திருக்கிற எங்கள் பிதாவே, ஸ்தோத்திரம்.

729. உம்முடைய ராஜ்யத்தைக் கொடுக்க பிரியமாயிருக்கிற எங்கள் பிதாவே, ஸ்தோத்திரம்.

730. உம்முடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான், ஸ்தோத்திரம்.

731. மனந்திரும்புகிற பாவியினிமித்தம் பரலோகத்தில் சந்தோஷம் உண்டாயிருப்பதற்காக, ஸ்தோத்திரம்.

732. எங்கள் இருதயங்களை அறிந்திருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

733. உம்முடைய ராஜ்யம் எங்களுக்குள் இருக்கிறதே, ஸ்தோத்திரம்.

734. தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும், ஸ்தோத்திரம்.

735. மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும், ஸ்தோத்திரம்.

736. எங்கள் வீட்டுக்கு இரட்சிப்பு வந்ததனால் ஸ்தோத்திரம்.

737. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே வந்த மனுஷகுமாரனே, ஸ்தோத்திரம்.

738. பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக, ஸ்தோத்திரம்.

739. உம்முடைய வீடு ஜெபவீடாயிருப்பதற்காக, ஸ்தோத்திரம்.

740. ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறவரே, உமக்குள் பிழைத்திருக்கிறோம், ஸ்தோத்திரம்.

741. ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் கொடுப்பவரே, ஸ்தோத்திரம்.

741. பொறுமையினால் எங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ள கிருபை அருளும், ஸ்தோத்திரம்.

742. வேதத்தில் எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டுபவரே, ஸ்தோத்திரம்.

743. மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வரப்போகிறவரே, ஸ்தோத்திரம்.

744. ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்ற இயேசுவே, ஸ்தோத்திரம்.

745. மெய்யாகவே உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

746. உங்களுக்குச் சமாதானம் என்ற இயேசுவே, ஸ்தோத்திரம்.

747. உன்னதத்திலிருந்து வரும் பெலனுக்காக, ஸ்தோத்திரம்.

748. ஆதியிலே வார்த்தையாய் இருந்த தேவனே, ஸ்தோத்திரம்.

749. ஆதியிலே தேவனோடிருந்த இயேசுவே, ஸ்தோத்திரம்.

750. இயேசுவே, சகலமும் உம் மூலமாய் உண்டாயிற்று, ஸ்தோத்திரம்.

bottom of page