top of page

451. கர்த்தாவே நீர் நல்லவர்,  உம்முடைய கிருபை என்றென்றைக்குமுள்ளது, ஸ்தோத்திரம்.

452. என் முழு உள்ளத்தோடு, உம்முடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரிப்பேன்.

453. என் அக்கிரமங்களையெல்லாம் மன்னிக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

454. என் நோய்களையெல்லாம் குணமாக்குகிற தேவனே, ஸ்தோத்திரம்.

455. என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டுவிடுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

456. நன்மையினால் என் வாயைத் திருப்தியாக்குகிற தேவனே, ஸ்தோத்திரம்.

457. உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ள தேவனே, ஸ்தோத்திரம்.

458. என்னுடைய பாவங்களை என்னை விட்டு விலக்கின தேவனே, ஸ்தோத்திரம்.

459. உம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலையாக மாற்றுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

460. நான் உயிரோடிருக்குமட்டும் உம்மைப் பாடுவேன். ஸ்தோத்திரம்.

461. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலூயா.

462. உமது வசனத்தை அனுப்பி எங்களைக் குணமாக்குகிற தேவனே, ஸ்தோத்திரம்.

463. சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

464. கற்பாறையை நீரூற்றுகளாக மாற்றுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

465. என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவிக்கிறவரே, ஸ்தோத்திரம்.

466. என் பெலனும், என் கீதமும், என் இரட்சிப்புமானவரே, ஸ்தோத்திரம்.

467. உம்முடைய வாக்கின்படி உமது தயவும், இரட்சிப்பும் எனக்கு வருவதாக, ஸ்தோத்திரம்.

468. கர்த்தாவே, உம்முடைய கரங்கள் என்னை உருவாக்கினதற்காக ஸ்தோத்திரம்.

469. உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது, ஸ்தோத்திரம்.

470. கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும், ஸ்தோத்திரம்.

471. கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை அங்கீகரியும், ஸ்தோத்திரம்.

472. என் மறைவிடமும் என் கேடகமும் நீரே, ஸ்தோத்திரம்.

473. கர்த்தாவே, உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது, ஸ்தோத்திரம்.

474. வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும், ஸ்தோத்திரம்.

475. என் வலது பக்கத்திலே எனக்கு நிழலாயிருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

bottom of page