Praises and Promises

401. என் நீதியை வெளிச்சத்தைப்போல விளங்கப்பண்ணுபவரே, ஸ்தோத்திரம்.
402. கர்த்தாவே, உமக்கு காத்திருக்கிறவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள், ஸ்தோத்திரம்.
403. நல்ல மனுஷனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிற தேவனே, ஸ்தோத்திரம்.
404. என்னை உயர்த்துகிற தேவனே, ஸ்தோத்திரம்.
405. இக்கட்டுக்காலத்திலே அடைக்கலமாய் இருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
406. கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே தூரமாயிராதேயும், ஸ்தோத்திரம்.
407. கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும், ஸ்தோத்திரம்.
408. கர்த்தாவே, உமது கிருபையும் உண்மையும் என்னைக் காக்கக்கடவது, ஸ்தோத்திரம்.
409. என் துணையான தேவனே, ஸ்தோத்திரம்.
410. என்னை விடுவிக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
411. சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவரே, ஸ்தோத்திரம்.
412. தேவனே, உமது இரட்சிப்பினிமித்தம் உம்மை துதிப்பேன், ஸ்தோத்திரம்.
413. சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
414. தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன், ஸ்தோத்திரம்.
415. அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவரே, ஸ்தோத்திரம்.
416. மரணபரியந்தம் நடத்துகிற தேவனே, ஸ்தோத்திரம்.
417. என் ஆத்துமாவைப் பாதாளத்திற்கு தப்புவித்து மீட்பவரே, ஸ்தோத்திரம்.
418. உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னை சுத்திகரியும், ஸ்தோத்திரம்.
419. தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், ஸ்தோத்திரம்.
420. நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை புறக்கணியாதவரே, ஸ்தோத்திரம்.
421. எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்த தேவனே, ஸ்தோத்திரம்.
422. என்னை ஆதரிக்கிற கர்த்தாவே, உம்மேல் என் பாரத்தை வைத்துவிடுவேன், ஸ்தோத்திரம்.
423. நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன், ஸ்தோத்திரம்.
424. தேவரீர், என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும், ஸ்தோத்திரம்.
425. என் கண்ணீர், உம்முடைய கணக்கில் இருப்பதற்காக, ஸ்தோத்திரம்.