Praises and Promises

126. உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக. ஸ்தோத்திரம்.
127. உமது பார்வைக்கு நலமானதைச் செய்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
128. கர்த்தாவே உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்காக, ஸ்தோத்திரம்.
129. கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவீராக, ஸ்தோத்திரம்.
130. சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்கிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.
131. என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகருமான தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.
132. நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமுமானவரே, உமக்கு ஸ்தோத்திரம்.
133. என் இரட்சண்ணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவரே, ஸ்தோத்திரம்.
134. என் புகலிடமும், என் இரட்சகருமான தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.
135. துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரே, உமக்கு ஸ்தோத்திரம்.
136. நெருக்கத்திலே, என் கூப்பிடுதலை கேட்ட தேவனே, ஸ்தோத்திரம்.
137. கை நீட்டி, என்னைத் தூக்கிவிடுகிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.
138. எனக்கு ஆதரவாயிருந்த கர்த்தரே, உமக்கு ஸ்தோத்திரம்.
139. என் இருளை வெளிச்சமாக்குகிற கர்த்தரே, உமக்கு ஸ்தோத்திரம்.
140. உம்மை நம்புகிற அனைவருக்கும் கேடகமாயிருக்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.
141. கர்த்தவே, உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; உம்மாலே ஒரு மதிலைத் தாண்டுவேன், ஸ்தோத்திரம்.
142. என் வழியைச் செவ்வைப்படுத்துகிற கர்த்தரே, உமக்கு ஸ்தோத்திரம்.
143. என் கால்களை மான் கால்கள் போலாக்குகிற கர்த்தரே, உமக்கு ஸ்தோத்திரம்.
144. என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிற கர்த்தரே, உமக்கு ஸ்தோத்திரம்.
145. ஜீவனுள்ள கர்த்தரே, உமக்கு ஸ்தோத்திரம்.
146. என் கன்மலையானவரே, உமக்கு ஸ்தோத்திரம்.
147. என் இரட்சிப்பின் கன்மலையே, உமக்கு ஸ்தோத்திரம்.
148. ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.
149. கர்த்தாவே, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன், ஸ்தோத்திரம்.
150. ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை தருபவரே, உமக்கு ஸ்தோத்திரம்.