top of page

951. என்னுடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியே, ஸ்தோத்திரம்.

952. உம்முடைய சித்தத்தின்படி செய்கிறவனே என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். ஸ்தோத்திரம்.

953. கர்த்தவே, உம்முடைய அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறேன், ஸ்தோத்திரம்.

954. நீர் எங்களில் நிலைத்திருக்கிறதை உம்முடைய ஆவியினாலே அறிந்திருக்கிறோம், ஸ்தோத்திரம்.

955. நித்தியஜீவனைத் நமக்கு தந்த தேவனே, ஸ்தோத்திரம்.

956. எங்களுக்கு இரக்கமும், சமாதானமும், அன்பும் பெருகப்பண்ணுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

957. உம்முடைய அன்பிலே எங்களைக் காத்துக்கொள்ளும் தேவனே, ஸ்தோத்திரம்.

958. நான் வழுவாதபடி, என்னைக் காக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

959. உம்முடைய சந்நிதானத்திலே என்னை மாசற்றவனாக நிறுத்த வல்லவரே, ஸ்தோத்திரம்.

960. இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் உண்டாவதாக, ஸ்தோத்திரம்.

961. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமான இயேசுகிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

962. மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், ராஜாக்களின் அதிபதியாகிய இயேசுகிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

963. உமது இரத்தத்தினாலே என்னுடைய பாவங்களை கழுவின இயேசுகிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

964. பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின இயேசுவே, ஸ்தோத்திரம்.

965. சர்வவல்லமையுள்ள கர்த்தரே, ஸ்தோத்திரம்.

966. அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறவரே, ஸ்தோத்திரம்.

967. சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற இயேசுகிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

968. மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவரே, ஸ்தோத்திரம்.

969. ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டிருக்கிறவரே, ஸ்தோத்திரம்.

970. ஜெயங்கொள்கிறவனுக்கு ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பவரே, ஸ்தோத்திரம்.

971. ஜெயங்கொள்கிறவனை இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றவரே, ஸ்தோத்திரம்.

972. இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவரே, ஸ்தோத்திரம்.

973. ஜெயங்கொள்கிறவனுக்கு மன்னாவைப் புசிக்கக்கொடுப்பேன் என்றவரே, ஸ்தோத்திரம்.

974. அக்கினிஜூவாலை போன்ற கண்களும், வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ளவரே, ஸ்தோத்திரம்.

975. திறந்தவாசலை எனக்கு முன்பாக வைத்திருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

bottom of page