top of page

551. “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோகும்” என்றவரே, ஸ்தோத்திரம்.

552. என்னை மேன்மைப்படுத்தியிருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

553. என்மேல் மனதுருகுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

554. நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

555. துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பவரே, ஸ்தோத்திரம்.

556. என் சுகவாழ்வு துளிர்த்தற்காக, ஸ்தோத்திரம்.

557. என்னைக் காக்கிற உம்முடைய மகிமைக்காக, ஸ்தோத்திரம்.

558. நான் கூப்பிடுகையில் மறுஉத்தரவு கொடுப்பவரே, ஸ்தோத்திரம்.

559. நான் சத்தமிடுகையில், “இதோ, நான் இருக்கிறேன்” என்றவரே, ஸ்தோத்திரம்.

560. நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், அகற்றுபவரே ஸ்தோத்திரம்.

561. நித்தமும் என்னை நடத்துபவரே, ஸ்தோத்திரம்.

562. மகா வறட்சியான காலங்களில் என் ஆத்துமாவைத் திருப்தியாக்குபவரே, ஸ்தோத்திரம்.

563. என் எலும்புகளை நிணமுள்ளதாக்குபவரே, ஸ்தோத்திரம்.

564. என்னை வற்றாத நீரூற்றைப்போல இருக்கும்படி ஆசிர்வதித்த தேவனே, ஸ்தோத்திரம்.

565. ஓய்வு நாளை பரிசுத்த நாளாக ஆசரிக்கும்படி தந்த தேவனே, ஸ்தோத்திரம்.

566. என் கிரியைகளுக்குத்தக்க பலனை அளிப்பவரே, ஸ்தோத்திரம்.

567. வெள்ளம்போல் சத்துரு வரும்போது, அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுபவரே, ஸ்தோத்திரம்.

568. உம்முடைய ஆவியும், நீர் அருளிய வார்த்தைகளும் என்னைவிட்டு நீங்குவதில்லை, ஸ்தோத்திரம்.

569. உம்முடைய மகிமை என்மேல் உதிப்பதற்காக, ஸ்தோத்திரம்.

570. உம்முடைய மகிமை என்மேல் காணப்படுவதற்காக ஸ்தோத்திரம்.

571. உம்முடைய கிருபையினால் எனக்கு இரங்கின தேவனே, ஸ்தோத்திரம்.

572. என்னை நித்திய மாட்சிமையாக வைப்பேன் என வாக்களித்த தேவனே, ஸ்தோத்திரம்.

573. நீரே, என் மகிமையுமாயிருப்பதற்காக ஸ்தோத்திரம்.

574. நீரே, என் நித்திய வெளிச்சமாயிருப்பதற்காக ஸ்தோத்திரம்.

575. என் துக்கநாட்கள் முடிந்துபோகும் என வாக்களித்த தேவனே, ஸ்தோத்திரம்.

bottom of page