top of page

601. என்னிலும் பலத்தவனுடைய கைக்கு என்னை நீங்கலாக்கி விடுவிக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

602. எனக்கு உருக்கமாய் இரங்குவேன் என்ற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

603. என் அக்கிரமத்தை மன்னித்து, என் பாவங்களை நினையாதிருக்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

604. கர்த்தாவே, உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை, ஸ்தோத்திரம்.

605. யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

606. நான் அறியாததும் எனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை அறிவிக்கிறவரே, ஸ்தோத்திரம்.

607. சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

608. “நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்” என்ற தேவனே, ஸ்தோத்திரம்.

609. நான் நிர்மூலமாகாதிருக்கிறது உம்முடைய கிருபையே, ஸ்தோத்திரம்.

610. உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் உம்மைத் தேடுகிறவர்களுக்கும் நல்ல கர்த்தரே, ஸ்தோத்திரம்.

611. ஆசீர்வாதமான மழை பெய்ய பண்ணுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

612. எல்லா அசுத்தங்களையும் நீக்கி எங்களைச் சுத்தமாக்குகிற தேவனே, ஸ்தோத்திரம்.

613. என் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிடுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

614. உம்முடைய கட்டளைகளின்படி என்னை நடக்க பண்ணுகிறவரே, ஸ்தோத்திரம்.

615. நிர்மூலமானவைகளைக் கட்டுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

616. உலர்ந்த எலும்புகளை உயிரடைய செய்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

617. தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக.

618. எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்த தேவனே, ஸ்தோத்திரம்.

619. தேவனே, நீர் எனக்கு செய்த அற்புதங்களை பிரசித்தப்படுத்துவேன், ஸ்தோத்திரம்.

620. உம்முடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், வழிகள் நியாயமுமானவைகள், ஸ்தோத்திரம்.

621. நான் இடைவிடாமல் ஆராதிக்கிற என் தேவனே, உமக்கே ஸ்தோத்திரம்.

622. வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

623. நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அழியாத ராஜ்யமும் உடையவரே, ஸ்தோத்திரம்.

624. இரக்கமும் மன்னிப்புமுடைய  ஆண்டவரே, ஸ்தோத்திரம்.

625. என்னைத் திடப்படுத்தி பலப்படுதுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

bottom of page