Praises and Promises

976. ஜெயங்கொள்கிறவனை உம்முடைய ஆலயத்திலே தூணாக்குகிறவரே, ஸ்தோத்திரம்.
977. சிங்காசனத்தில் உம்மோடு கூட உட்காரும்படிக்கு அருள்செய்பவரே, ஸ்தோத்திரம்.
978. சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர். ஸ்தோத்திரம்.
979. மகிமைக்கும் கனத்துக்கும் வல்லமைக்கும் பாத்திரராயிருக்கிறவரே, ஸ்தோத்திரம்.
980. சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே, ஸ்தோத்திரம்.
981. தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக.
982. என்னுடைய கண்ணீர் யாவையும் துடைக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
983. சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, ஸ்தோத்திரம்.
984. வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரே, ஸ்தோத்திரம்.
985. கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள், ஸ்தோத்திரம்.
986. உம்முடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகளே, ஸ்தோத்திரம்.
987. தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள், ஸ்தோத்திரம்.
988. தேவரீர் நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர், ஸ்தோத்திரம்.
989. உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள், ஸ்தோத்திரம்.
990. கர்த்தாதி கர்த்தரே, ராஜாதி ராஜவே, ஸ்தோத்திரம்.
991. அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரே, ஸ்தோத்திரம்.
992. தேவனுடைய சத்தியமான வசனங்களுக்காக, ஸ்தோத்திரம்.
993. உம்மோடு கூட ஆயிரம் வருஷம் அரசாளுவதற்காக, ஸ்தோத்திரம்.
994. பரலோகத்தைவிட்டு இறங்கி வருகிற புதிய எருசலேமுக்காக, ஸ்தோத்திரம்.
995. எங்களோடு கூட இருந்து எங்கள் தேவனாயிருப்பவரே, ஸ்தோத்திரம்.
996. சகலத்தையும் புதிதாக்குகிற தேவனே, ஸ்தோத்திரம்.
997. தாகமாயிருக்கிறவனுக்கு ஜீவத்தண்ணீரை கொடுப்பவரே, ஸ்தோத்திரம்.
998. உம்முடைய வசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள், ஸ்தோத்திரம்.
999. தாவீதின் சந்ததியும், விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறவரே, ஸ்தோத்திரம்.
1000. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை நம் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.