Praises and Promises

151. கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை, ஸ்தோத்திரம்.
152. உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதை எங்களுக்குச் செய்வீராக, ஸ்தோத்திரம்.
153. உம்முடைய கண்கள் என் வேண்டுதலுக்கு திறந்திருப்பதாக, ஸ்தோத்திரம்.
154. என் விண்ணப்பத்தைக் கேட்ட தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.
155. என் கண்ணீரைக் கண்ட தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.
156. என்னை குணமாக்குகிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.
157. கர்த்தாவே உம்மை துதித்து, உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவேன், ஸ்தோத்திரம்.
158. கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுவேன், ஸ்தோத்திரம்.
159. கர்த்தாவே, உம்மை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக, ஸ்தோத்திரம்.
160. கர்த்தாவே உம்மை பாடி, உம்முடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவிப்பேன், ஸ்தோத்திரம்.
161. பரிசுத்த அலங்காரத்துடனே உம்மை தொழுதுகொள்வோம், ஸ்தோத்திரம்.
162. கர்த்தாவே நீர் நல்லவர், உம் கிருபை என்றுமுள்ளது. ஸ்தோத்திரம்.
163. கர்த்தாவே, சதாகாலங்களிலும் உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
164. இப்போது இருக்கிறதைப்பார்க்கிலும் நூறத்தனையாய் கர்த்தர் வர்த்திக்கப்பண்ணுவாராக, ஸ்தோத்திரம்.
165. இருதயங்களை ஆராய்கிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.
166. எங்கள் நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.
167. கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகளே, ஸ்தோத்திரம்.
168. தேவரீர் ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது, உமக்கு ஸ்தோத்திரம்.
169. கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது, ஸ்தோத்திரம்.
170. என் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டருளுவீர், ஸ்தோத்திரம்.
171. பரலோகத்திலிருந்து எங்கள் ஜெபங்களைக் கேட்டு மன்னிப்பீராக, உமக்கு ஸ்தோத்திரம்.
172. பெலன் உள்ளவன், பெலன் அற்றவன் யாராய் இருந்தாலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம், ஸ்தோத்திரம்.
173. உத்தமனுக்குக் கர்த்தர் துணை, ஸ்தோத்திரம்.
174. கர்த்தாவே, உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஸ்தோத்திரம்.
175. பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று சொன்ன கர்த்தரே, ஸ்தோத்திரம்.