top of page

226. நான் போகும் வழியை நீர் அறிவீர், ஸ்தோத்திரம்.

227. கர்த்தவே, நீர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன், ஸ்தோத்திரம்.

228. பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

229. உமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப்பண்ணுகிறீர், ஸ்தோத்திரம்.

230. உமது ஆவியினால் வானத்தை அலங்கரித்த தேவனே, ஸ்தோத்திரம்.

231. என் சுவாசம் என்னிலும், நீர் தந்த ஆவி என் நாசியிலும் இருப்பதால், ஸ்தோத்திரம்.

232. மழைக்குத் திட்டத்தையும், மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிற தேவனே, ஸ்தோத்திரம்.

233. கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானம், ஸ்தோத்திரம்.

234. தேவனே, என்னை நீர் காப்பாற்றிவந்த நாட்களுக்காக ஸ்தோத்திரம்.

235. நீர் அருளின வெளிச்சத்தினால் நான் இருளைக் கடந்துபோவேன், ஸ்தோத்திரம்.

236. சர்வவல்லவர் என்னோடிருந்தீர், ஸ்தோத்திரம்.

237. என்னை உண்டாக்கின தேவனுடைய ஆவியானவரே, ஸ்தோத்திரம்.

238. எனக்கு உயிர்கொடுத்த சர்வவல்லவருடைய சுவாசத்திற்காக ஸ்தோத்திரம்.

239. என் ஆத்துமாவைப் படுகுழிக்கும், என் ஜீவனைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறீர், ஸ்தோத்திரம்.

240. எனக்கு இரங்கி, நான் படுகுழியில் இறங்காதபடிக்கு, என்னை இரட்சியும், ஸ்தோத்திரம்.

241. மனுஷனுடைய செய்கைக்குத்தக்கதை அவனுக்குச் சரிக்கட்டுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

242. அவனவன் நடக்கைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிக்கிறீர், ஸ்தோத்திரம்.

243. ஒருவரையும் புறக்கணியாத மகத்துவமுள்ள தேவனே, ஸ்தோத்திரம்.

244. மன உருக்கத்தில் மகத்துவமுள்ள தேவனே, ஸ்தோத்திரம்.

245. உம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காத தேவனே, ஸ்தோத்திரம்.

246. சிறுமைப்பட்டவர்களை சிறுமைக்கு நீங்கலாக்குகிற தேவனே, ஸ்தோத்திரம்.

247.  வல்லமையில் உயர்ந்திருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

248. அறிய முடியாத மகத்துவமுள்ள தேவனே, ஸ்தோத்திரம்.

249.  நீர்த்துளிகளை மழையாய்ச் பொழியப் பண்ணுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

250.  கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை செய்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

bottom of page