top of page

1. வானத்தையும் பூமியையும் படைத்த தேவனே, ஸ்தோத்திரம்.

2. மனுகுலத்தைப் உமது சாயலாக  படைத்த தேவனே, ஸ்தோத்திரம்.

3. ஏழாவது நாளை ஆசீர்வதித்து பரிசுத்தமாக்கின தேவனே, ஸ்தோத்திரம்.

4. பூமியின் மண்ணிலிருந்து  மனிதனை உருவாக்கின தேவனே, ஸ்தோத்திரம்.

5. தம்முடைய சுவாசத்தை மனிதனுக்கு கொடுத்த தேவனே, ஸ்தோத்திரம்.

6. மிருகங்களையும், அனைத்து பறவைகளையும் படைத்த தேவனே, ஸ்தோத்திரம்.

7. மனிதனுடைய விலா எலும்பிலிருந்து பெண்ணைப் படைத்த தேவனே, ஸ்தோத்திரம்.

8. நம்மோடும் நம் சந்ததியோடும் உடன்படிக்கை பண்ணின தேவனே, ஸ்தோத்திரம் .

9. சேமுடைய தேவனாகிய கர்த்தரே, ஸ்தோத்திரம்.

10. உன்னதமான தேவனே, ஸ்தோத்திரம்.

11. என்னைக் காண்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

12. என்றென்றும் ஜீவிக்கும் தேவனே, ஸ்தோத்திரம்.

13. யேகோவா யீரே, ஸ்தோத்திரம்.

14. ஆபிரகாம், ஈசாக்கின் தேவனே, ஸ்தோத்திரம்.

15. என் துன்பங்களை கண்ட தேவனே, ஸ்தோத்திரம்.

16. என்னுடைய துன்பத்தில் உதவிய தேவனே, ஸ்தோத்திரம்.

17. யாக்கோபுக்கு தம்மை வெளிப்படுத்தின தேவனே, ஸ்தோத்திரம்.

18. யோசேப்புக்கு வெற்றியை கொடுத்த கர்த்தரே, ஸ்தோத்திரம்.

19. யோசேப்பை எகிப்தின் ஆளுநராக்கிய தேவனே, ஸ்தோத்திரம்.

20. என் வாழ்நாள் முழுவதும் வழி நடத்துகிற தேவனே, ஸ்தோத்திரம்.

21. யாக்கோபின் வல்லவரும், இஸ்ரவேலின் தேவனுமாகியவரே, ஸ்தோத்திரம்.

22. மேய்ப்பரும், இஸ்ரவேலின் பாறையுமாகிய தேவனே, ஸ்தோத்திரம்.

23. என்னை ஆசீர்வதிக்கிற, சர்வ வல்லமையுள்ள தேவனே, ஸ்தோத்திரம்.

24. ஜெபத்தைக் கேட்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

25. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுடன் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்த தேவனே, ஸ்தோத்திரம்.

bottom of page