top of page

276. உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து கெம்பீரிப்பார்களாக, ஸ்தோத்திரம்.

277. நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியத்தால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர், ஸ்தோத்திரம்.

278. கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன். என்மேல் இரக்கமாயிரும், ஸ்தோத்திரம்.

279. கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது. என்னைக் குணமாக்கும், ஸ்தோத்திரம்.

280. கர்த்தாவே, உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும், ஸ்தோத்திரம்.

281. என் அழுகையின் சத்தத்தைக் கேட்டீரே, உமக்கு ஸ்தோத்திரம்.

282. என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன். ஸ்தோத்திரம்.

283. இருதயங்களை சோதித்தறிகிற தேவனே, ஸ்தோத்திரம்.

284. செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற கர்த்தாவே, ஸ்தோத்திரம்.

285. நீதியுள்ள நியாயாதிபதியே, உமக்கு ஸ்தோத்திரம்.

286. கர்த்தருடைய உன்னதமான நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன், ஸ்தோத்திரம்.

287. உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது, ஸ்தோத்திரம்.

288. என்னை நீர் நினைக்கிறதற்கும், விசாரிக்கிறதற்கும் நான் எம்மாத்திரம், ஸ்தோத்திரம்.

289. என்னை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டுபவரே, ஸ்தோத்திரம்.

290. என் முழு இருதயத்தோடு உம்மைத் துதிப்பேன், ஸ்தோத்திரம்.

291. நீதியுள்ள நியாயாதிபதியாய்ச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற கர்த்தாவே, ஸ்தோத்திரம்.

292. சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதிசெய்பவரே, ஸ்தோத்திரம்.

293. சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமானவரே, ஸ்தோத்திரம்.

294. உம்மைத் தேடுகிறவர்களை கைவிடாத தேவனே, ஸ்தோத்திரம்.

295. மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

296. கர்த்தாவே, எழுந்தருளும் ஏழைகளை மறவாதேயும், ஸ்தோத்திரம்.

297. சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

298. சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

299. திக்கற்ற பிள்ளைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

300. நீதிமானைச் சோதித்தறிகிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

bottom of page