top of page

326. என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கின தேவனே, ஸ்தோத்திரம்.

327. ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன், ஸ்தோத்திரம். 

328. என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக, ஸ்தோத்திரம்.

329. கர்த்தாவே, உம்முடைய வல்லமையைப் பாடிக் கீர்த்தனம் பண்ணுவேன், ஸ்தோத்திரம்.

330. என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவரே, ஸ்தோத்திரம்.

331. என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் என் தேவனாயிருக்கிறவரே, ஸ்தோத்திரம்.

332. என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணும் கர்த்தரே, ஸ்தோத்திரம்.

333. உம்முடைய நாமத்தை அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன், ஸ்தோத்திரம்.

334. உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அற்பமாய் எண்ணாதிருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

335. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன், ஸ்தோத்திரம்.

336. புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய் விடுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

337. என் ஆத்துமாவைத் தேற்றி, நீதியின் பாதைகளில் நடத்துகிற தேவனே, ஸ்தோத்திரம்.

338. தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும், தடியும் என்னைத் தேற்றும், ஸ்தோத்திரம்.

339. என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

340. வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தரே, ஸ்தோத்திரம்.

341. என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடிச் செய்யும், ஸ்தோத்திரம்.

342. கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும், ஸ்தோத்திரம்.

343. என் இரட்சிப்பின் தேவனே, உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன், ஸ்தோத்திரம்.

344. உம்முடைய இரக்கங்களும், காருணியங்களும் அநாதி காலமுதல் இருக்கிறதே, ஸ்தோத்திரம்.

345. உமது கிருபையின்படியே என்னை நினைத்தருளும், ஸ்தோத்திரம்.

346. நல்லவரும் உத்தமருமாயிருக்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

347. சாந்தகுணமுள்ளவர்களுக்கு உமது வழியைப் போதிக்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

348. உம்முடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகளே,  ஸ்தோத்திரம்.

349. கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும், ஸ்தோத்திரம்.

350. உமக்கு பயப்படுகிற மனுஷனுக்கு உம்முடைய வழியைப் போதிப்பவரே, ஸ்தோத்திரம்.

bottom of page