Praises and Promises

101. நாங்கள் சேவிக்கும் கர்த்தரே, ஸ்தோத்திரம்.
102. கர்த்தாவே உம்மை பாடி, கீர்த்தனம்பண்ணுவேன், ஸ்தோத்திரம்.
103. பராக்கிரமசாலிகளின்மேல் ஆளுகை தந்த தேவனே, ஸ்தோத்திரம்.
104. சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, ஸ்தோத்திரம்.
105. உம்முடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வருபவருக்கு நிறைவான பலன் தருபவரே, ஸ்தோத்திரம்.
106. கர்த்தவே, உம்மைப் போல பரிசுத்தமுள்ளவர் ஒருவரும் இல்லை, ஸ்தோத்திரம்.
107. சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, குப்பையிலிருந்து உயர்த்துகிற தேவனே, ஸ்தோத்திரம்.
108. பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையதே, ஸ்தோத்திரம்.
109. பரிசுத்தவான்களின் பாதங்களைக் காக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
110. கர்த்தாவே நீர் சொல்லும் அடியேன் கேட்கிறேன், ஸ்தோத்திரம்.
111. பார்வைக்கு நலமானதைச் செய்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
112. கேருபீன்களின் மத்தியிலே வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தரே, ஸ்தோத்திரம்.
113. இம்மட்டும் எங்களுக்கு உதவிசெய்த கர்த்தரே, ஸ்தோத்திரம்.
114. உம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் உமது ஜனத்தைக் கைவிடமாட்டீர், ஸ்தோத்திரம்.
115. மகிமையான காரியங்களைச் செய்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.
116. இருதயத்தைப் பார்க்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.
117. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே, ஸ்தோத்திரம்.
118. அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப் பலன் அளிப்பவரே, ஸ்தோத்திரம்.
119. என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுபவரே, ஸ்தோத்திரம்.
120. கர்த்தவே, எங்களை கிருபையும் உண்மையுமாய் நடத்துவீராக, ஸ்தோத்திரம்.
121. என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தரே, ஸ்தோத்திரம்.
122. தாவீதோடு கூட இருந்த சேனைகளின் தேவனாகிய கர்த்தரே, ஸ்தோத்திரம்.
123. என் சத்துருக்களை எனக்கு முன்பாக உடைத்து ஓடப்பண்ணின தேவனே, ஸ்தோத்திரம்.
124. கர்த்தரே, நீர் பெரியவர், ஸ்தோத்திரம்.
125. தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத்தவிர வேறே தேவனும் இல்லை, ஸ்தோத்திரம்.