top of page

751. மனுஷருக்கு ஒளியாயிருக்கிற ஜீவனுள்ள தேவனே, ஸ்தோத்திரம்.

752. எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியே, ஸ்தோத்திரம்.

753. எங்களை உம்முடைய பிள்ளைகளாகும்படி அதிகாரங்கொடுத்தவரே, ஸ்தோத்திரம்.

754. கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்த இயேசுவே, ஸ்தோத்திரம்.

755. எங்களுக்குள் வாசம் பண்ணுகிற உம்முடைய மகிமைக்காக, ஸ்தோத்திரம்.

756. உம்முடைய பரிபூரணத்தினால் நாங்கள் கிருபையின்மேல் கிருபைபெற்றதற்காக, ஸ்தோத்திரம்.

757. கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயிருப்பதற்காக, ஸ்தோத்திரம்.

758. உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியே, ஸ்தோத்திரம்.

759. ரபீ - போதகரே, ஸ்தோத்திரம்.

760. மேசியா - கிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

761. ரபீ, நீர் தேவனுடைய குமாரன், ஸ்தோத்திரம்.

762. தண்ணீரை திராட்சரசமாய் மாற்றின இயேசுவே, ஸ்தோத்திரம்.

763. பரலோகத்திலிருந்து இறங்கின மனுஷகுமாரனே, ஸ்தோத்திரம்.

764. உம்முடைய குமாரனை தந்தருளி, உலகத்தை அன்பு கூர்ந்த தேவனே, ஸ்தோத்திரம்.

765. பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவரே, ஸ்தோத்திரம்.

766. உம்மில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை அடைவதற்காக, ஸ்தோத்திரம்.

767. ஜீவத்தண்ணீரைக் கொடுக்கிற இயேசுவே, ஸ்தோத்திரம்.

768. உம்மை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள பெலன் தாரும், ஸ்தோத்திரம்.

769. கிறிஸ்துவாகிய உலகரட்சகரே, ஸ்தோத்திரம்.

770. வியாதியஸ்தனை சொஸ்தமாக்கின இயேசுவே, ஸ்தோத்திரம்.

771. நியாயத்தீர்ப்பின் அதிகாரத்தை குமாரனுக்கு ஒப்புக்கொடுத்த பிதாவே, ஸ்தோத்திரம்.

772. மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வருகிறதற்காக, ஸ்தோத்திரம்.

773. உம்முடைய சத்தத்தைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள், ஸ்தோத்திரம்.

774. ஜீவ அப்பமாகிய இயேசுவே, ஸ்தோத்திரம்.

775. உம்மிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், ஸ்தோத்திரம்.

bottom of page