top of page

826. இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிற ஆவியானவரே, ஸ்தோத்திரம்.

827. தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிற கிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

828. எங்களுக்காக வேண்டுதல் செய்கிற இயேசுகிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

829. கிறிஸ்துவே, உம் அன்பைவிட்டு எதுவும் என்னை பிரிக்காதிருப்பதாக, ஸ்தோத்திரம்.

830. சர்வத்திற்கும் மேலான தேவனே, ஸ்தோத்திரம்.

831. இயேசுவை, தேவன் மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று விசுவாசிக்கிறேன், ஸ்தோத்திரம்.

832. கர்த்தாவே, உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். ஸ்தோத்திரம்.

833. உம்முடைய ராஜ்யம் பரிசுத்த ஆவியினாலுண்டான சந்தோஷமாயிருக்கிறதற்காக, ஸ்தோத்திரம்.

834. பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவனே, ஸ்தோத்திரம்.

835. விசுவாசத்தினால் உண்டாகும் சந்தோஷத்திற்காகவும் சமாதானத்திற்காகவும், ஸ்தோத்திரம்.

836. சமாதானத்தின் தேவன் நம் அனைவரோடுங்கூட இருப்பதற்காக, ஸ்தோத்திரம்.

837. தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிற கிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

838. ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமான கிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

839. எங்களில் வாசமாயிருக்கிற தேவனுடைய ஆவியானவரே, ஸ்தோத்திரம்.

840. உம்முடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறதற்காக, ஸ்தோத்திரம்.

841. என்னை நியாயம் விசாரிக்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.

842. எங்கள் சரீரம் பரிசுத்த ஆவியானவர் தங்கி இருக்கிற ஆலயமாயிருப்பதற்காக, ஸ்தோத்திரம்.

843. பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது, ஸ்தோத்திரம்.

844. சமாதானத்தின் தேவனே, ஸ்தோத்திரம்.

845. வானத்திலிருந்து வந்த கர்த்தரே, ஸ்தோத்திரம்.

846. நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

847. இரக்கங்களின் பிதாவே, ஸ்தோத்திரம்.

848. ஆறுதலின் தேவனே, ஸ்தோத்திரம்.

849. உபத்திரவங்களில் எனக்கு ஆறுதல்செய்கிறவரே, ஸ்தோத்திரம்.

850. அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக, ஸ்தோத்திரம்.

bottom of page