top of page

201. கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்.

202. ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களை செய்கிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

203. எண்ணிமுடியாத அதிசயங்களை செய்கிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

204. துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

205. எளியவனை பலவானின் கைக்கு விலக்கி இரட்சிக்கிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

206. தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான், உமக்கு ஸ்தோத்திரம்.

207. ஆறு இக்கட்டுகளுக்கு நீங்கலாக்கி, ஏழாவது பொல்லாப்பும் தொடாது என வாக்களித்தீரே, ஸ்தோத்திரம்.

208. பஞ்சகாலத்திலே மரணத்திற்கு விலக்கி மீட்டிரே, உமக்கு ஸ்தோத்திரம்.

209. கர்த்தாவே, நீர்  என்னை ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கு நான் எம்மாத்திரம்? உமக்கு ஸ்தோத்திரம்.

210. துவக்கம் அற்பமாயிருந்தாலும், முடிவு சம்பூரணமாயிருப்பதற்காக, ஸ்தோத்திரம்.

211. உத்தமனை வெறுக்காத தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

212. என் வாயை நகைப்பினாலும், உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புபவரே, உமக்கு ஸ்தோத்திரம்.

213. இருதயத்தில் ஞானமுள்ளவரே, உமக்கு ஸ்தோத்திரம்.

214. பெலத்தில் பராக்கிரமமுள்ளவரே, உமக்கு ஸ்தோத்திரம்.

215. சூரியனுக்குக் கட்டளையிடுபவரே, உமக்கு ஸ்தோத்திரம்.

216.  வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின்மேல் நடக்கிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

217. நட்சத்திரங்களையும், தட்சண மண்டலங்களையும் உண்டாக்கினவரே, உமக்கு ஸ்தோத்திரம்.

218. எண்ணி முடியாத அதிசயங்களை செய்கிறவரே, ஸ்தோத்திரம்.

219. உம்முடைய கரங்களால் என்னை உருவாக்கிய தேவனே, ஸ்தோத்திரம்.

220. களிமண்போல என்னை உருவாக்கின தேவனே, ஸ்தோத்திரம்.

221. எனக்கு ஜீவனைத் தந்து, தயவையும் பாராட்டின தேவனே, ஸ்தோத்திரம்.

222. மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் உம்முடைய கரத்தில் உள்ளதே, ஸ்தோத்திரம்.

223. அதிகமான ஞானமும், வல்லமையும், ஆலோசனையும் புத்தியுமுள்ள தேவனே, ஸ்தோத்திரம்.

224. நீர் என்னைக் கொன்றுபோட்டாலும், உம்மேல் நம்பிக்கையாயிருப்பேன், ஸ்தோத்திரம்.

225. கர்த்தவே, கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பீர் என்று நான் அறிந்திருக்கிறேன், ஸ்தோத்திரம்.

bottom of page