top of page

876. ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை தந்தருளகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

877. இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, ஸ்தோத்திரம்.

878. கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு என்னை இரட்சித்த தேவனுக்கு, ஸ்தோத்திரம்.

879. என்னை இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமாக்கின தேவனே, ஸ்தோத்திரம்.

880. என்னை புதிய மனுஷனாகச் மாறப்பண்ணின கிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

881. வேண்டிக்கொள்கிறதற்கு அதிகமாய் எனக்குள்ளே கிரியைசெய்கிற பிதாவே, ஸ்தோத்திரம்.

882. ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனே, ஸ்தோத்திரம்.

883. காணிக்கையாகவும் பலியாகவும், எனக்காக ஒப்புக்கொடுக்கபட்ட கிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

884. என்னைப் பிரகாசிப்பிக்கிற கிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

885. இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே பிதாவாகிய தேவனுக்கு, ஸ்தோத்திரம்.

886. எல்லா நாமத்திற்கும் மேலான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

887. கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்புக்காக ஸ்தோத்திரம்.

888. சமாதானத்தின் தேவன் நம்மோடு இருப்பதற்காக, ஸ்தோத்திரம்.

889. என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய பெலனுண்டு, ஸ்தோத்திரம்.

890. என்னுடைய குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் நிறைவாக்கும் தேவனே, ஸ்தோத்திரம்.

891. இருளின் அதிகாரத்தினின்று என்னை விடுதலையாக்குகிற பிதாவே, ஸ்தோத்திரம்.

892. கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்புக்காக, ஸ்தோத்திரம்.

893. ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமான இயேசு கிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

894. மகிமையின் நம்பிக்கையாக எனக்குள் இருக்கும் கிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

895. இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.

896. தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரப்போகிற இயேசுகிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

897. தேவ எக்காளத்தோடு வானத்திலிருந்து வரப்போகிற இயேசுகிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

898. சமாதானத்தின் தேவன் தாமே என்னை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, ஸ்தோத்திரம்.

899. நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கொடுத்திருக்கிற பிதாவாகிய தேவனே, ஸ்தோத்திரம்.

900. கர்த்தர் நம்மை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்வராக, ஸ்தோத்திரம்.

bottom of page