Praises and Promises

926. நித்திய ஆவியினாலே பலியாக ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்ததிற்காக, ஸ்தோத்திரம்.
927. தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
928. விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவே, ஸ்தோத்திரம்.
929. பயத்தோடும் பக்தியோடும் உமக்குப் பிரியமாய் ஆராதனை செய்ய கிருபை அருளும், ஸ்தோத்திரம்.
930. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசுவே, ஸ்தோத்திரம்.
931. உம்முடைய நாமத்தைத் துதிக்கும் ஸ்தோத்திரபலியை எப்போதும் செலுத்ததுவேன், ஸ்தோத்திரம்.
932. யாவருக்கும் ஞானத்தை சம்பூரணமாய்க் கொடுக்கிறவரே, ஸ்தோத்திரம்.
933. உம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு ஜீவகிரீடத்தை தருபவரே, ஸ்தோத்திரம்.
934. தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.
935. மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ள கர்த்தரே, ஸ்தோத்திரம்.
936. கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்டீரே, ஸ்தோத்திரம்.
937. உம்முடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும், ஸ்தோத்திரம்.
938. எங்கள் பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்த இயேசுவே, ஸ்தோத்திரம்.
939. கிறிஸ்துவே, உம்முடைய தழும்புகளால் குணமானோம், ஸ்தோத்திரம்.
940. நீதிமான்கள் வேண்டுதலைக் கவனமாய் கேட்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.
941. நம்மேல் தங்கியிருக்கிற தேவனுடைய ஆவியானவரே, ஸ்தோத்திரம்.
942. என்னை உயர்த்தும்படிக்கு, உம்முடைய பலத்த கைக்குள் அடங்கியிருப்பேன், ஸ்தோத்திரம்.
943. எங்களை விசாரிக்கிற கர்த்தரே, ஸ்தோத்திரம்.
944. எங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துகிற தேவனே, ஸ்தோத்திரம்.
945. தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
946. கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.
947. என்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிற தேவனே, ஸ்தோத்திரம்.
948. இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்காக, ஸ்தோத்திரம்.
949. எங்களுடைய பாவங்களை மன்னித்து, சுத்திகரிக்க உண்மையும் நீதியும் உள்ளவரே, ஸ்தோத்திரம்.
950. எங்களுக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிற இயேசுகிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.