top of page

776. உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான், ஸ்தோத்திரம்.

777. பிதாவின் சித்தத்தின்படி செய்ய வானத்திலிருந்திறங்கி வந்த இயேசுவே, ஸ்தோத்திரம்.

778. உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, ஸ்தோத்திரம்.

779. உம்முடைய வசனங்கள் எனக்கு ஜீவனாய் இருக்கிறது, ஸ்தோத்திரம்.

780. நீரே வாசல், உம் வழியாய் உட்பிரவேசிப்பவன் இரட்சிக்கப்படுவான், ஸ்தோத்திரம்.

781. ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுத்த நல்ல மேய்ப்பனே, ஸ்தோத்திரம்.

782. உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிற இயேசுவே, ஸ்தோத்திரம்.

783. தேவகுமாரனாகிய கிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

784. நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்ற கிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

785. வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிற இயேசுவே, ஸ்தோத்திரம்.

786. உம்மை விசுவாசிக்கிறவன் பெரிய கிரியைகளை செய்வான் என்ற இயேசுவே, ஸ்தோத்திரம்.

787. சத்திய ஆவியாகிய தேற்றரவாளனே, ஸ்தோத்திரம்.

788. உம்முடைய சமாதானத்தை எங்களுக்குக் கொடுக்கிற இயேசுவே, ஸ்தோத்திரம்.

789. “உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” என்ற இயேசுவே, ஸ்தோத்திரம்.

790. அதிக கனிகளைக் கொடுக்கும்படி எங்களை சுத்தம்பண்ணுகிற இயேசுவே, ஸ்தோத்திரம்.

790. இயேசுவே, உம்மையல்லாமல் எங்களால் ஒன்றும் செய்யக்கூடாதே, ஸ்தோத்திரம்.

791. எங்களிடத்தில் அன்பாயிருக்கிற இயேசுவே, ஸ்தோத்திரம்.

792. பாவத்தைக்குறித்துக் கண்டித்து உணர்த்துகிற தேற்றரவாளனே, ஸ்தோத்திரம்.

793. சகல சத்தியத்திற்குள்ளும் எங்களை நடத்துகிற ஆவியானவரே, ஸ்தோத்திரம்.

794. எங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுகிறவரே, ஸ்தோத்திரம்.

795. உம்முடைய நாமத்தினாலே கேட்டுக்கொள்வதெதுவோ அதைத் தருகிறவரே, ஸ்தோத்திரம்.

796. சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க உலகத்திற்கு வந்த இயேசுவே, ஸ்தோத்திரம்.

797. காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்ற இயேசுவே, ஸ்தோத்திரம்.

798. மனத்தாழ்மையோடும், கண்ணீரோடும் கர்த்தரைச் சேவிப்பேன், ஸ்தோத்திரம்.

799. ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர், ஸ்தோத்திரம்.

800. உமக்குச் சாட்சியாய் இருக்கும்படி பெலன் தருகிற பரிசுத்த ஆவியானவரே, ஸ்தோத்திரம்.

bottom of page